Jana TNPSC Tamil Study Materials | தமிழ் வளர்த்த சான்றோர்

 • புதுக்கவிதைக்கு     -    பாரதியார்
 • சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன்
 • பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க
 • தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள்
 • பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா
 • சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன்

  வீரமாமுனிவர் (1680 - 1747)

  • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
  • இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
  • இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
  • ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
  • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
  • பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.
  • தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
  • தமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.
  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.
  • தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.
  • ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
  • கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.
  • பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
  • “தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.
  • குணங்குடி மஸ்தான் (1788-1835)
  • “மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்.
  • இவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிறு
  • இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.
  • சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளுக்குச் சென்று, தனித்திருந்து ஞானம் பெற்றார்.
  • இவர் தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
  • தாயுமானவரின் பராபரக்கண்ணிப் போலவே ஓசை நயம்மிக்க இசுலாமியப் பாடல்களை  இயற்றி அருளினார்.
  • பராபரக்கண்ணி, எக்காலக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக்கண்ணி முதலியன இவர் பாடிய வேறு சில கண்ணிகள்.
  • இவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி என்றும் அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்துச் செல்லுவன.
  • இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
  • இவர்  திருத்தணி சரவணப் பெருமாள் மீது கொண்ட பற்றின் காரணமாக நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.
  • அந்நூலில் “மடல் சூல்புவியில் உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல்சூழ்பவரின், குணங்குடியான், மிக்கோன் எனற்குஓர் தடையுளதோ?” எனக் கேட்கின்றார்.
   ஆறுமுக நாவலர் (1822-1879)
   • இவர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.
   • இயற்பெயர் ஆறுமுகனார் என்பதாகும்.
   • இளமையிலே சைவ சிந்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தெளிவாகக் கற்றார்.
   • தமிழ்ப்புலமையும் ஆங்கிலப்புலமையும் ஒருசேரக் கைவரப் பெற்றார். அதனால் இருமொழி கற்பிக்கும் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
   • இவரின் சொற்பொழிவு திறமையையும் வாக்கு வன்மையையும் பொருள் விளக்கும் தன்மையையும் கண்டு  திருவாவடுதுறை ஆதீனத்தார் இவருக்கு “நாவலர்” என்னும் பட்டம் வழங்கினார்.
   • இவர், சிறந்த பதிப்பாசிரியராகவும் தேர்ந்த உரையாசிரியராகவும் விளங்கினார்.
   • ஆறுமுக நாவலரே முதன்முதலில் இலக்கண வழுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையைக் கையாண்டார்.
   • இவரை வசன நடை கைவந்த வல்லாளர் எனப் பரிதிமாற்கலைஞர் பாராட்டினார்.
   • ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சுக்கூடம் அமைத்தார்.
   • அந்த அச்சுக் கூடத்தில் சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தார்.  
   • பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை முதலிய இலக்கிய நூல்களையும், இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி முதலிய இலக்கண நூல்களையும் தம் அச்சுக்கூடத்தின் வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
   • முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரைக்கான பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.
    Download pdf file

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற