பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்-3

வெற்றி நிச்சயம்
நண்பர்களே......

குரூப் 4, VAO, குரூப் 2A......

தற்போது நமது கனவுகள் இந்த தேர்வினை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும்..... ஏனெனில் போட்டிகள் அதிகம், அதற்கு ஏற்றவாறு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை நாம் சாதாரணமாக எண்ணக் கூடாது, படிக்காமலே நான் 100 பதில் அளித்து விட்டேன். அதேபோல் இந்த தடவை எழுதினால் இன்னும் அதிகமா எடுத்து விடுவேன் என வீண் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.
கடந்த 4 அல்லது 5 வருட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் வினாக்கள் கேட்கப் படுகிறது, என்பதை முதலில் பாருங்கள். தமிழ் பகுதியில் நிறைய இலக்கணம் வரும், அதை மிக அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுத்தமிழ் பிரிவில் 100 வினாக்கள். எப்பாடுபட்டாவது தமிழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நன்றாக படித்து விரல் நுனியில் வைத்து இருங்கள். கடினம் என்றால் எல்லாம் கடினமே...முடியும் என்றால் எல்லாம் முடிமே....


இதைச் சொல்லி சொல்லிப் பாருங்கள். நம்மால் முடியும்.

உறவினர்களின் ஏளனம், அவமானம், வறுமை, இதை எல்லாம் ஒரு நிமிடம் கண்ணை மூடி நினைத்து பாருங்கள். கண் முன் என்ன தோன்றுகிறது??? வெற்றி பெற வேண்டும், ஜெய்த்து காட்டணும்னு தோணுதா???
கண்டிப்பாக தோன்றும்.

இப்ப எழுதப் போற தேர்வுதான் உங்கள் தலையெழுத்தை மாற்றும் என நம்புங்கள். உங்களுக்கு மற்றவர் ஊக்கம் குடுக்க வேண்டும் என்று எதுவுமில்லை. உங்களுக்கு நீங்களே உற்சாகம் கொடுங்கள். ஒரு பாடத்தை முடித்த பின்பு உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். "உங்களால் முடியும்" என்பதை உங்கள் மனதிற்க்கு, அடிக்கடிச் சொல்லி பதிய வையுங்கள்.

எல்லாம் அறிந்தவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. அதனால் உங்களை தாழ்த்திக் கொள்வதை நிறுத்துங்கள். முடிந்தவரை போராடுங்கள். முடியவில்லையா?? அடுத்த தேர்வுக்கு போராடுங்கள். அதான் 3 தேர்வுகள் உள்ளதே.....?? அதுக்குன்னு அடுத்துப் பார்த்துக் கொள்ளலாம் என கவனக்குறைவாக இருக்க கூடாது.

தேர்வுக்கு தயாராவோர், பள்ளி இறுதி வகுப்பு வரையுள்ள வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியல் அமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திறனறிவு கேள்விகள், அறிவுக்கூர்மை தொடர்பான கேள்விகள், நடப்பு நிகழ்வுகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

என்னுடைய இந்த பதிவு கண்டிப்பாக சில பேருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம். படிப்பதற்கும் உதவும் என நம்புகிறேன்.


வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் படியுங்கள், நிச்சயமாக வெற்றிபெறுவீர்கள்.

நன்றி

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற