பெண்களுக்கான உலக பாடி பில்டர் பட்டத்தை வென்ற இந்தியாவின் பூமிகா ஷர்மா!

இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் நடைபெற்ற  பெண்களுக்கான பாடிபில்டர் போட்டியில் 2017 ஆண்டிற்கான பெண்களுக்கான உலக பாடி பில்டர் பட்டத்தைப் இந்தியாவின் பூமிகா ஷர்மா பெற்றார்.

இதன்மூலம் பாடி பில்டர் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 50 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 27வது இடத்தில் இருந்தார் இந்தியாவின் பூமிகா ஷர்மா. இவர் மற்ற போட்டியாளர்களை காட்டியும் அனைத்து சுற்றுகளிலும் அதிக புள்ளிகளை பெற்றதால் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

டெஹ்ராடூனைச் சேர்ந்தவர் பூமிகா ஷர்மா. பூமிகா ஷர்மாவின் தாய் ஹன்சா மன்ரல் ஷர்மா மகளிர் பளுத்தூக்குதல் பயிற்சியாளராக உள்ளார்.

உலக பட்டத்தை வென்ற பூமிகா, டிசம்பர் மாதம் பிரிட்டனில் நடைபெற இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
2017 Current affairs in tamil 
Current affairs Free Online Test

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற