பிட்காயின் (Bitcoin) என்றால் என்ன?

பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். 2009-ல் சந்தோஷி நகமோடோ என்ற புனை பெயரில் அடையாளம் தெரியாத ஒருவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதனை கணினியில் உள்ள அல்கோரிதம் (algorithm) வகை கணிதத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். இந்த வழிமுறையில் பிட்காயின் உருவாக்குவதை மைனிங் (mining) என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு கூடுதல் பிட்காயின் உருவாக்கும் போதும், இந்த கணக்கு முறை சிக்கலாகிக் கொண்டே போகும். இவ்வாறு தொடர்ந்து பிட்காயின் உருவாக்க முடியாது, அதிக பட்சமாக 21 மில்லியன் பிட்காயின்தான் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.


பிட்காயின் வைத்திருப்போர் அதற்கென ஒரு மெய்நிகர் பணப்பையையும் உருவாக்கி அதில் பிட்காயினை வைத்திருப்பர். இந்த மெய்நிகர் பணப்பைக்கு நமது ஈமெயில்போல ஒரு முகவரியும் கடவுச்சொல்லும் (password) உண்டு. இதில் பிட்காயின் போட ஒரு வழி, எடுக்க ஒரு வழி உண்டு. நான் உங்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கி அதற்கான பிட்காயினை உங்களுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தி என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து உங்கள் மெய்நிகர் பணப்பைக்கு மாற்றி விடுவேன். என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து பிட்காயினை எடுக்கும் வழிக்கான கடவுச்சொல் யாருக்கும் தெரியாத வரையில் என்னுடைய மெய்நிகர் பணப்பை பாதுகாப்பாக இருக்கும்.

ஒவ்வொரு நாட்டின் பணமும் அந்தந்த நாட்டின் மைய வங்கியால் உருவாக்கப்பட்டு அதன் மாற்று விகிதங்கள் ஓரளவுக்கு நிலை நிறுத்தப்படும். பணத்தின் பயன்பாடு தொடர்பான சட்டங்களும் உண்டு. ஆனால், எந்த நாட்டு மைய வங்கி யும் உருவாக்காத பிட்காயின், எந்த நாட்டு சட்டத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கிறது.

ஜெர்மன் அரசு பிட்காயின் பரிவர்த்தனையை அங்கீகரித்து அதன் மீது வரி விதிக்கவும் செய்கிறது. ரிச்சர்ட் பிரான்சன் என்ற தொழிலதிபர் தன் விமான நிறுவனத்தில் பிட்காயினை பயன்படுத்தி விமான சீட்டு வாங்கலாம் என்று கூறுகிறார். சீனாவில் பெய்டூ என்ற இணைய தளம் பிட்காயினை பயன்படுத்தி வியாபாரம் செய்வதை ஊக்குவிக்கிறது. அமெரிக்க மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கி இதுபோன்ற மெய்நிகர் பணம் நீண்ட காலத்துக்கு துரிதமான பாதுகாப்பான பண மாற்றத்தை சிறப்பாக செய்ய உதவும் என்று கூறுகிறார்.

பிட்காயின் சட்டவிரோத நடவடிக்கை களுக்கும் பயன்படுவதாக அமெரிக்க காவல் துறை கண்டுபிடித்துள்ளது. சில்க் ரோட் என்ற இணையதளம் மூலம் சட்டவிரோத வியாபாரம் செய்த ஒரு நிறுவனத்தில் நடந்த சோதனையில் அவர்கள் 26 ஆயிரம் பிட்காயின்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதே போன்று மற்றொரு மெய்நிகர் பணம் 2006ல் உருவாக்கப்பட்டு பல சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க அரசு கண்டுபிடித்து அழித்தது. இதனால்தான் இந்த மெய்நிகர் பணமான பிட்காயினை பயன்படுத்த வேண்டாம் என்று பல நாடுகள் கூறுகின்றன.

பிட்காயின் மதிப்பு என்ன? பிட்காயின் மதிப்பு என்ன? ஒரு பிட்காயின் = ரூ.18,050/= மட்டுமே. ஒரு பிட்காயின் = 350 அமெரிக்க டாலர்  (May 2017)
பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பிட்காயின்களை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி?

இதற்காக இணையத்தில் இயங்கும் பல்வேறு நிதிமாற்று முனையங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து இத்தகைய சுலப வர்த்தகச் செலாவணியை நாம் வாங்கிக் கொள்ள இயலும்.

இந்தியாவின் சில புகழ்பெற்ற பிட்காயின் வேலட் நிறுவனங்கள் : Zebpay, Unocoin, BTCXIndia மற்றும் Coinsecure ஆகியனவாகும்.


No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற