64-வது தேசிய திரைப்பட விருதுகள்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் ஏப்ரல் 7, 2017 அன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார். கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் 'ஜோக்கர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தராஐயர் சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெறவுள்ளார்.

சிறந்த திரைப்பட விமர்சகருக்கான விருது தனஞ்சயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (தர்மதுரை)

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'தர்மதுரை'. இப்படத்தில் இடம்பெற்ற 'எந்தப்பக்கம்' பாடலுக்காக, வைரமுத்து சிறந்த பாடலாசிரியர் விருது வென்றுள்ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

'24' படத்துக்கு 2 விருதுகள்

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '24' படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக திருவுக்கு விருது கிடைத்துள்ளது

தேசிய விருதுகள் பட்டியல்:

சிறந்த படம்: மராட்டிய மொழிப் படம் - காசவ்

சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மபுஸ்கா - மராட்டிய படம்- வென்டிலேட்டர்

சிறந்த தமிழ்ப் படம்: ஜோக்கர்

சிறந்த நடிகை: சி.எம்.சுரபி - மலையாளப் படம் மினாமினுகு படத்தில் நடித்தமைக்காக

சிறந்த நடிகர்: அக்‌ஷய் குமார் ரூஸ்டம்

சிறந்த உறுதுணை நடிகை: ஜாய்ரா வாசிம் - தங்கல்

சிறந்த பாப்புலர் திரைப்படம் - சதாமனம் பவதி (தெலுங்கு)

சிறந்த குழந்தைகள் திரைப்படம் - தனக்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்- மஹோயோத ரானா (இந்தி)

சிறந்த சண்டை வடிவமைப்பு: பீட்டர் ஹெய்ன் (புலிமுருகன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதீஷ் பிரவீன் (படம்: குஞ்சு தெய்வம்), சாஜ் (படம்: நூர் இஸ்லாம்), மனோகரா (படம்: ரயில்வே சில்ட்ரன்)

சிறந்த பின்னணி பாடகி: இமான் சக்ரபர்த்தி

சிறந்த பின்னணி பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)

சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ஷ்யாம் புஷ்கரன்

சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணஜி படேல்

சிறந்த நடன அமைப்பு: ராஜூ சுந்தரம் (ஜனதா கார்கே)

சிறந்த இசையமைப்பு: பாபு பத்மநாபா (அலமா)

சிறந்த ஒப்பனை: எம்.கே.ராமகிருஷ்ணா

சிறந்த எடிட்டிங்: ராமேஷ்வர் - வென்டிலேட்டர்

சிறந்த ஒப்பனை: சைக்கிள் திரைப்படத்துக்காக சச்சின் லவேல்கர்

சிறந்த ஒலி வடிவமைப்பு: காடு பூக்கும் நேரம் - ஜெயதேவன் சக்கா தத்

சிறந்த துணை நடிகர்: தசாகிரியா - மராத்தி

சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - தி டைகர் வூ கிராஸ்ட் தி லேன் (The Tiger who crossed the lane)

சமூக பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - அமிதாப் பச்சனின் 'பிங்க்'

தேசிய ஒறுமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம்: திக்சோவ் பனாத்

அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: அலிபா (வங்கமொழி) இயக்குநர்- தீப் சவுத்ரி

சினிமா துறைக்கு இணக்கமான மாநிலம்: உத்தரப் பிரதேசம்.

சிறந்த திரைப்பட விமர்சகர்: தனஞ்சயன்

சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்கள்:

* மதிபூர் (துளு)

* ஜோக்கர் (தமிழ்)

* ராங்சைட் ராஜூ (குஜராத்தி)

* பெல்லி சூப்புலு (தெலுங்கு)

* தசகரியா (மராத்தி)

* பிஸார்ஜன் (வங்காளம்)

* மகேஷின்ட பிரதிகாரம் (மலையாளம்)

* கே சரா சரா (கொங்கனி)

* ரிசர்வேஷன் (கன்னடம்)

* நீர்ஜா (இந்தி)

பெண்களுக்கான உலக பாடி பில்டர் பட்டத்தை வென்ற இந்தியாவின் பூமிகா ஷர்மா!
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீரர்
2017 Current affairs in tamil 
Current affairs Free Online Test

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற