இந்திய அரசியலமைப்பு | குடியரசுத் தலைவர்

 • குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
 • குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
 • குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.
 • குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.
 • குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
 • Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.
 • Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவர் மீது குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.
 • பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.
  பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் லோக்சபா சபாநாயகர்.
 • முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
 • முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் இவரே.
 • அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
 • முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
 • முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்.
 • முதல் தலித் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
 • முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
 • பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
 • பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும் சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
 • Art. 72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்.
 • Art. 123 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.
 • குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.
 • குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன்
  குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள் தொகுப்பை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற