சாலை இளந்திரையன் TNPSC General Tamil

இயற்பெயர்: வ.இரா.மகாலிங்கம்.

பெற்றோர்: வ.இராமையா-சின்னலட்சுமி

பிறந்த இடம்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலைநயினார் பள்ளிவாசல் 

திராவிட இயக்கக் கருத்தியலுக்கு  ஆட்பட்டிருந்த இவர் அவ்வியக்க மரபின்படி தனக்கென ஒரு புனைப்பெயரை வைத்துக்கொள்ள விழைந்தார். ஆகவே சங்ககால மன்னனான இளந்திரையன் பெயரை தன்னுடைய புனைப் பெயராகக்கொண்டு இரா. இளந்திரையன் என்னும் பெயரில் படைப்புகளை ஆக்கினார். 
பின்னாளில் தன்னுடைய ஊர்பெயரின் முதற்பகுதி தனது புனைப்பெயருக்கு முன்னே இணைத்து சாலை இளந்திரையன் ஆனார்.

1957-இல் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர தகவல், ஒலிபரப்புத் துறைத் தலைவரானார்.

1959ம் ஆண்டில் தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை தொடங்கப்பட்டதும் சாலை இளந்திரையன் அத்துறையில் விரிவுரையளராகப் பணியேற்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே 1972ம் ஆண்டில் பேருரையாளராகவும் (Reader) 1983ம் ஆண்டில் பேராசிரியராகவும் (Professor) பதவி உயர்வுபெற்றார். 1985ல் விருப்ப ஒய்வுபெற்று தமிழகம் திரும்பினார்.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சுடர் என்னும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.

 1991-இல் தமிழக அரசின் பாவேந்தர் விருதினைப் பெற்றார்

இவரது படைப்புகளான புரட்சி முழக்கம், உரைவீச்சு  ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றது.

1991 ஆம் ஆண்டில்  பாரதிதாசன் நூற்றாண்டின் நிறைவு விழாவில் இளந்திரையன் அவர்களுக்கு பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.
1971ம் ஆண்டு அறிவியக்கப் பேரவை என்னும் அமைப்பை சாலை இளந்திரையன் உருவாக்கினார்.

தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் நூலை எழுதியதற்காக ஆவர் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது.

1974 ஆம் ஆண்டில் யாழ்பாணத்தில் நடைபெற்ற நான்காம் உலக தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அதில் சாலை இளந்திரையன் முக்கியப் பணியாற்றினார். 

4.10.1998 அன்று மரணமடைந்தார்.

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற