Group 4 exam Certificate Verification

குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு ... இதில் எனக்கு தெரிந்ததை பதிவிடுகிறேன்...

திரு. சதீஸ்குமார் அவர்களின் பதிவு 

1. கவுன்செல்லிங் லெட்டர்
2. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
3. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4. பட்டம் சான்றிதழ் (Degree Certificate)
5. சாதி சான்றிதழ்
6. தமிழ் வழியில் படித்த சான்றிதழ்
7. நன்னடத்தை சான்றிதழ் (2)
8. மாற்றுச் சான்றிதழ்

இதில் 2 to 8 வரை சான்றொப்பம் (Attested) வாங்க வேண்டும்.

தமிழ் வழி கல்வி சான்றிதழ் தங்களுக்கு வந்த லெட்டரில் உள்ள விண்ணப்பம் போன்றே வாங்க வேண்டும். வேறு எந்த விண்ணபத்திலும் வாங்க வேண்டாம். மேலும் எந்த சான்றிதழும் வாங்கவில்லை என்றாலும் ஏழு நாட்களுக்குள் லெட்டரில் அனுப்புமாறு இன்று வந்தவர்களை கேட்டுக் கொண்டார்கள். தங்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுமா என்று தெரிய வில்லை. எனவே அனைத்து சான்றிதழ்களும் சரியாக கொண்டு செல்லுங்கள்.

காலை 8.00 மணிக்கு உள்ளே விடுவார்கள்... பிறகு 9.00 மணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூன்று பேர் கொண்ட குழு சரி பார்க்கும். பிறகு அவர்களுடைய மேற்பார்வையாளர் சரிபார்ப்பார். பிறகு அனைத்து ஒரிஜினல் சான்றிதழ் நம்மிடம் தந்து விடுவார்கள்.  மீண்டும் அடுத்த நாள் காலையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

வெளி ஊரிலிருந்து வருபவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் பிராட்வே செல்லும் பேருந்து வரும் ... அதில் ஏறி ஐந்து நிமிடத்தில் பிராட்வே சென்று விடலாம்... பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவமனை மற்றும் கல்லுரி அருகிலேயே TNPSC உள்ளது...

வெளியே ரூம் பார்ப்பவர்கள் சென்னை சட்ட கல்லுரி எதிர்புறம் பாசில் லாட்ச் உள்ளது.... ஒரு நாள் வாடகை 450 அட்வான்ஸ் 350. ரூம் நன்றாக உள்ளது... இரண்டு பேர் நன்றாக தங்கலாம்.. 2014 group 4 Ponathu


No comments:

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற