நிதி ஆணையம், தேர்தல் ஆணையம் - இந்திய அரசியலமைப்பு

நிதி ஆணையம்
 • நிதி ஆணையத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி
 • நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
 • நிதி ஆணையத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்
 • நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள் ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்
 • நிதி ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.
 • முதல் நிதி ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951
 • முதல் நிதி ஆணையத்தின் தலைவர் - கே.சி. நியோகி
 • 10வது நிதி ஆணையதின் தலைவர் கே.சி. பந்த்
 • 11வது நிதி ஆணையதின் தலைவர் பேராசிரியர் ஏ.எம். குஸ்ரோ
 • 12வது நிதி ஆணையதின் தலைவர் கே.சி.ரங்கராஜன்
 • 13வது நிதி ஆணையதின் தலைவர்  டாக்டர் விஜய் எல்.கெல்கர்
 • இந்திய அரசு ஜனவரி 2, 2013 அன்று 14 வது நிதி ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2015 - 2020 வரை செயல்படும். 
 • 14 வது நிதி ஆணையத்தின் தலைவர்  :  யாக வேணுகோபால் ரெட்டி (Y.V.ரெட்டி),
 • நிதிஆணையத்தின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது.

தேர்தல் ஆணையம்

 • தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.
 • தேர்தல் ஆணையம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் 324
 • தேர்தல் ஆணையம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.
 • தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.
 • தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து  324 (5)
 • தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
 • தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.
 • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையம்.
 • தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையம்
 • புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது தேர்தல் ஆணையம்.
 • முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையம்.
 • கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையம் ஆகும்.

  Click and download

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற