திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் 2017


தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்க் காணும் விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

விருதுகள் பெறுவோர்
1. திருவள்ளுவர் விருது- 2017, புலவர் பா.வீரமணி.
2. தந்தை பெரியார் விருது-2016, பண்ருட்டி ராமச்சந்திரன்.
3. அண்ணல் அம்பேத்கர் விருது--2016, டாக்டர் துரைசாமி  
4. பேரறிஞர் அண்ணா விருது--2016, கவிஞர் கூரம் துரை  
5. பெருந்தலைவர் காமராசர் விருது-2016, நீலகண்டன்  
6. மகாகவி பாரதியார் விருது-2016, பேராசிரியர் முனைவர் கணபதிராமன்  
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது-2016, கவிஞர் பாரதி  
8. தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது-2016, பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.  
9. முத்தமிழ்க் காவலர்  கி.ஆ.பெ. விசுவநாதம் விருது-2016, மீனாட்சி முருகரத்தினம்.  

மேற்காணும் விருதுகளை திருவள்ளுவராண்டு 2048, தை 2-ஆம் நாள், 15-ந்தேதி (ஞாயிறு) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குகிறார்.

விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 1  லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். 

இவ்விழாவில் அகவை முதிர்ந்த 50 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற