செய்யுள் விகாரம்

விகாரம் என்பது இயல்பு மாற்றம்.

செய்யுளில் எதுகை, மோனைகளுக்காகச் சில சொற்கன் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படும். ஓசை ஒத்திசைவுக்காக இவை இவ்வாறு வருகின்றன.

வலித்தல் விகாரம்
குறுந்தாட் பூதம் (குறுந்தாள் என்பதில் உள்ள [ள்] வல்லின [ட்] ஆயிற்று)

மெலித்தல் விகாரம்
தண்டையின் இனக்கிளி கடிவோள் (தட்டை என்பதில் உள்ள [ட்] தண்டை என வரும்போது [ண்] ஆகி மெலிந்தது)

நீட்டல் விகாரம்
போத்தறார் புல்லறிவினார் (பொத்தறார் என்னும் சொல் போத்தறார் என நீண்டது) பொத்து > போத்து

குறுக்கல் விகாரம்
நன்றென்றேன் தியேன் (தீயேன் என்பது தியேன் எனக் குறுகி வந்தது)

விரித்தல் விகாரம்
நெல் விளையும்மே (விளையுமே என்பது விளையும்மே என விரிந்தது)

தொகுத்தல் விகாரம்
நீ நாடுகென (நீ நாடுக என்பதன் இறுதியில் உள்ள [அ] தொக்குநின்றது அதாவது மறைந்து நின்றது)

No comments:

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற

 

TET, TNPSC ONLINE TEST