2016ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு

2016ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேரும் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர்.

வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் தெளலஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டங்கன் ஹால்டேன், பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

குவான்டம் மேட்டர் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் ஆய்வில் இவர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வுகள் பல புதிய தகவல்களைத் தருவதாக அமைந்துள்ளது. இதற்காகவே இவர்களுக்கு நோபல் கிடைத்துள்ளது.

இயற்பியல் நோபல் பரிசு இயற்பியலுக்கான நோபலின் ஒரு பகுதி அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஜே.தவ்லெஸ் என்பவருக்கும், இன்னொரு பாதி அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி டங்கன் ஹால்டேன் மற்றும் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜே.மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் என்பவருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது. 
குவாண்டம் கோட்பாடு குவாண்டம் கோட்பாட்டின் கீழ் வரும் பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு நோபல் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் ஆய்வில் இவர்கள் மேற்கொண்ட பாதைதிறப்பு ஆய்வுகளுக்காகவே தற்போது இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் இத்தகைய அறியப்படாத, வழக்கத்திற்கு மாறான பருப்பொருள் எடுக்கும் வழக்கத்துக்கு மாறான கட்டங்கள் அல்லது நிலைகள் பற்றிய அரிய ஆய்வாகும் இது. அதாவது அதிமின்கடத்திகள் அதிநீர்மங்கள் , காந்தப்புல படிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய மிகவும் சிக்கலான கணிதவியல் மாதிரிகளைப் பயன்படுத்தினர். 
இவர்களது கண்டுபிடிப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

நியூட்ரினோ - குவாண்டம் கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் நியூட்ரினோக்கள் குறித்த ஆய்வுகளுக்காக டகாகி கஜிதா மற்றும் ஆர்தர் பி.மெக்டோனல்டு ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

குவான்டம் மேட்டர் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் ஆய்வில் இவர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வுகள் பல புதிய தகவல்களைத் தருவதாக அமைந்துள்ளது. இதற்காகவே இவர்களுக்கு நோபல் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற