அவமானங்களை உங்களது வெற்றிக்கு உரமாக்கிக் கொள்ளுங்கள்!

இதன் முந்தைய பகுதியைப் படிக்க... 

எங்களை சுற்றி ஊடக வாகனங்கள் கேமராக்களுடன் வந்தன. நாங்கள் ஏதோ பெரிய குற்றமிழைத்து விட்டு போலீஸ் வேனில் சென்றது போன்று இருந்தது. அதாவது ஒரு கொலையாளி அல்லது பயங்கரவாதி என்பது போன்று. உண்மையில் ஊடகங்களால் நாங்கள் அன்று விரட்டப்பட்டோம். பிறகு எங்களை காவல்நிலையத்தில் சிறிது நேரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து இருந்தனர். நாங்களும் அமைதியாக உட்கார்ந்து இருந்தோம். பின்னர் 15-20 நிமிடங்களுக்குப் பின்னர் எங்கள் கார்களில் புறப்பட்டு வீடுகளை சென்று அடைந்தோம். 

இதுதான் என்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுதான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாகவும், சிறந்த கேப்டனாகவும், சிறந்த மனிதனாகவும், நான் என்னை வடிவமைத்துக் கொள்ள உதவியது.
-- இவ்வாறு கூறி உள்ளார்.


இந்த அளவு அவமானத்தையும், வலியையும் அறிந்த தோனி 2011 ம் ஆண்டு நடந்த அடுத்த உலகக் கோப்பையில் ஒரு தலை சிறந்த தலைவராகவும், வீரராகவும் செயல்பட்டு சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு மீண்டும் உலக கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
இந்த உலகில் அவமானம், வலி இல்லாத மனிதனே கிடையாது. கவிஞர் வைரமுத்து கூறுவார், "குடலில் ஒரு அவுன்சு மலமும், மூளையில் ஒரு அவுன்சு அவமானமும் இல்லாத மனிதன் இந்த உலகிலேயே இல்லை" என்று. எப்பேற்பட்ட மாமனிதராக இருந்தாலும் அவரும் ஒரு நாள் அவமானத்தை சந்தித்தவராகவே இருக்கிறார். 

அவமானத்தைக் கண்டு துவண்டு போகிறவர்கள் சாதாரண மனிதர்கள், அதனை தங்கள் வெற்றிக்கு உரமாக பயன்படுத்துகிறவர்கள் சாதனையாளர்கள். 

எனவே "வேலை இல்லை, வெட்டி தானே நீ, சரியான தெண்டம், எவ்வளவு நாள்தான் படிச்சுக்கிட்டு இருப்ப, எப்போதான் நீ பாஸ் பண்ணுவ" போன்ற உங்களது அவமானங்களை உங்களது வெற்றிக்கு உரமாக்கிக் கொள்ளுங்கள். 
அவமானங்களை ஒரு போதும் தலைக்கு கொண்டு செல்லாதீர்கள், அவ்வாறு கொண்டு சென்றால் உங்களால் ஒரு வேலையும் செய்ய முடியாது. உங்கள் காலடியிலேயே வைத்து விடுங்கள்.

ஏனென்றால், ஒரு செடிக்கோ அல்லது மரத்திற்கோ உரம் தேவைப்படுவது வேரின் அடியில் தானே தவிர கிளையின் நுனியில் அல்ல. 

உங்கள் அவமானங்களை உரமாக்கி, உங்கள் கண்ணீர்த் துளிகளை நீராக்கி உங்கள் முயற்சி என்னும் செடியினை வளருங்கள், வெற்றிப் பூ தன்னால் பூக்கும்.

அன்புடன் அஜி,
சென்னை.

15 comments:

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற