பிழை திருத்தம்

ஒருமை பன்மை - பிழை திருத்தம்

வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்:
பிழை:  வண்டிகள் ஓடாது
திருத்தம்: வண்டிகள் ஓடா

பிழை:    அவை இங்கே உளது
திருத்தம்: அவை இங்கே உள

பிழை: அது எல்லாம்
திருத்தம்: அவை எல்லாம்

பிழை: மக்கள் கிடையாது
திருத்தம்: மக்கள் இல்லை

பிழை: வருவதும்போவதும் கிடையாது
திருத்தம்: வருவதும் போவதும் கிடையா

பிழை: ஒன்றோ அல்லது இரண்டோ தருக
திருத்தம்: ஒன்றோ இரண்டோ தருக

பிழை: சென்னை என்ற நகரம்
திருத்தம்: சென்னை என்னும் நகரம்

பிழை: எனது மகன்
திருத்தம்: என் மகன்

பிழை: ஏற்கத் தக்கது அல்ல
திருத்தம்: ஏற்கத் தக்கது அன்று

பிழை: அவளது தந்தை
திருத்தம்: அவள் தந்தை

பிழை: புலி வந்தன
திருத்தம்: புலி வந்தது

பிழை: எருதுகள் ஓடியது
திருத்தம்: எருதுகள் ஓடின

பிழை: பூக்கள் மலர்ந்து மணம் வீசியது
திருத்தம்: பூக்கள் மலர்ந்து மணம் வீசின
பிழை: இங்குள்ளது எல்லாம் நல்ல பழங்களே
திருத்தம்: இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே

பிழை: எனக்குப் பல வீடுகள்உள
திருத்தம்: எனக்கு வீடுகள் பல உள்ளன

பிழை: இது பொது வழி அல்ல
திருத்தம்: இது பொது வழி அன்று

பிழை: விழாவில் பல அறிஞர் பேசினர்
திருத்தம்: விழாவில் அறிஞர்கள் பலர் பேசினர்

பிழை: தென்றல் மெல்ல வீசின
திருத்தம்: தென்றல் மெல்ல வீசியது

பிழை: வாகனத்தை இடது பக்கம் திருப்பாதே
திருத்தம்: வாகனத்தை இடப்பக்கம் திருப்பாதே

பிழை: பத்து பழங்களில் ஒரு பழமே நல்லன
திருத்தம்: பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லது

பிழை: வலது பக்கச் சுவரில் எழுதாதே
திருத்தம்: வலப்பக்கச் சுவரில் எழுதாதே

பிழை: ஒவ்வொரு சிற்றூர்களிலும் ஊராட்சி உள்ளது.
திருத்தம்: ஒவ்வொரு சிற்றூரிலும் ஊராட்சி உள்ளது.

பிழை: மாணவர்கள் கல்வியறிவு ஒழுக்கத்திற் சிறந்து விளங்க வேண்டும்.
திருத்தம்: மாணவர்கள் கல்வியறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
பிழை: அவர் தான் கூறினார் இவர் தான் கூறினார் என்று பாராது எவர் தான் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க
திருத்தம்: அவர்தாம் கூறினார் இவர்தாம் கூறினார் என்று பாராது எவர்தாம் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க.

பிழை: நல்லவகைளும் கெட்டவைகளும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
திருத்தம்: நல்லனவும், கெட்டனவும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.

பிழை: கண்ணன் முருகன் மற்றும்வேலன் வந்தனர்.
திருத்தம்: கண்ணன், முருகன், வேலன் ஆகியோர் வந்தனர்.

பிழை: சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமரி அல்ல.
திருத்தம்: சென்னைக்கு அருகில் இருப்பது கன்னியாகுமரி அன்று.

பிழை: தலைவி தலைவனோடு சென்றார்
திருத்தம்: தலைவி தலைவனோடு சென்றாள்

பிழை: இதனைச் செய்தவர் இவரல்லவா?
திருத்தம்: இதனைச் செய்தவர் இவரல்லரோ?

பிழை: பெரியதும் சிறியதுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
திருத்தம்: பெரியனவும், சிறியனவுமான சாமான்களைச் செய்கிறார்கள்.

No comments:

Post a Comment

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற